News June 3, 2024
வெள்ளியங்கிரி மலையேற அதிக ஆர்வம்

சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களைப் பார்த்து வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 3 மாதத்தில் 2.5 லட்சம் மக்கள் மலையேறியிருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2 லட்சம் பக்தர்கள் மட்டுமே மலையேறினர். உரிய பாதுகாப்பு இல்லாமலும் பயிற்சி இல்லாமலும் மலையேறிய பக்தர்களில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
Similar News
News September 20, 2025
ஆண்மைக்கு ஆபத்து.. ஆண்களே இதை செய்யாதீங்க

ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் குறைய வாய்ப்புள்ளதாக California University ஆய்வு கூறுகிறது. ஷவரில் குளிப்பதை விட, குளியல் தொட்டிகளில் குளிப்பதால் பாதிப்பு அதிகமாம். அதேநேரம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில், பாதிப்பு சரியாகி விடுமாம். ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது, உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாமாம்.
News September 20, 2025
பாதிப்புக்கு இதுதான் காரணமா?

விந்தணுக்கள் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் உடல் வெப்பநிலையை(37- 37.5 °C) விட 3°C முதல் 4°C குறைவான வெப்பநிலை அவசியம். அதனால் தான் ஆண்களுக்கு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் விதைப்பையை இயற்கை உடலுக்கு வெளியில் அமைத்துள்ளது. இதனால் தான் அதிக நேரம் வெந்நீரில் இருப்பது, இறுக்கமான உள்ளாடை அணிவது வெப்பத்தை அதிகரித்து விந்தணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
News September 20, 2025
விஜய் சொல்லும் புது கணக்கு

நாகையில் பேசிய விஜய், தான் பேசுவதற்கு பல தடைகளை திமுக அரசு ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். அப்போது அவர், 5 நிமிடம் தான் பேச வேண்டும், 10 நிமிடம் தான் பேச வேண்டும் எனக் கட்டுப்பாடு. நான் பேசுவதே 3 நிமிடம் தான் என்று சொன்னார். இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள், பேசுவதே 3 நிமிடம் தான் எனில், எதற்காக விஜய் இதை குறையாக சொல்கிறார் என்று கேட்கின்றனர். நீங்களே ஒரு தீர்ப்பை சொல்லுங்க.