News June 3, 2024

விரைவில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி

image

சென்னையில் இன்னும் ஒரு மாதத்தில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அண்மையில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், நாயை நாய் எனக் கூறவிடாமல் குழந்தை என்று கூறுவதாக வேதனை தெரிவித்தார். அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பிய அவர், நாய் வளர்ப்பவர்கள் உரிய லைசென்ஸ் பெறுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

Similar News

News September 20, 2025

தனுஷை இயக்கும் ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து

image

‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனது அடுத்த படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளார். ‘லப்பர் பந்து’ படம் வெளியாகி ஒராண்டை நிறைவு செய்திருக்கும் நிலையில், அதற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது அடுத்த படத்தின் ஹீரோ தனுஷ் என்றும் நடிப்பு அசுரனுக்கு ஆக்‌ஷன், கட் சொல்ல காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News September 20, 2025

ஆண்மைக்கு ஆபத்து.. ஆண்களே இதை செய்யாதீங்க

image

ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் குறைய வாய்ப்புள்ளதாக California University ஆய்வு கூறுகிறது. ஷவரில் குளிப்பதை விட, குளியல் தொட்டிகளில் குளிப்பதால் பாதிப்பு அதிகமாம். அதேநேரம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில், பாதிப்பு சரியாகி விடுமாம். ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது, உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாமாம்.

News September 20, 2025

பாதிப்புக்கு இதுதான் காரணமா?

image

விந்தணுக்கள் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் உடல் வெப்பநிலையை(37- 37.5 °C) விட 3°C முதல் 4°C குறைவான வெப்பநிலை அவசியம். அதனால் தான் ஆண்களுக்கு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் விதைப்பையை இயற்கை உடலுக்கு வெளியில் அமைத்துள்ளது. இதனால் தான் அதிக நேரம் வெந்நீரில் இருப்பது, இறுக்கமான உள்ளாடை அணிவது வெப்பத்தை அதிகரித்து விந்தணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

error: Content is protected !!