News June 3, 2024
NRI வாக்குகள் எப்படி கணக்கிடப்படும்?

தேர்தலில் வாக்களிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு EC அனுமதியளித்துள்ளது. இதற்காக, EC இணையதளம் சென்று 6 A படிவத்தை பூர்த்தி செய்து தபாலிலோ, இணையதளத்திலோ பதிவேற்றலாம். அதை சரிபார்த்து பெயரை வாக்காளர் பட்டியலில் EC சேர்க்கும். இதையடுத்து தேர்தல் நாளில் குறிப்பிட்ட தொகுதியில் உள்ள சாவடியில் நேரில் சென்று வாக்களிக்க வேண்டும். அவரது வாக்கு, பிற வாக்குப் போலவே கணக்கிடப்படும்.
Similar News
News September 20, 2025
Parenting: பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்கலாமா?

பிறந்த குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சளி பிடித்திருக்கும் நபர் முத்தமிட்டால் அந்த குழந்தைக்கு ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் எளிதாக பரவுமாம். குழந்தையின் உடலுக்குள் நுழையும் இந்த வைரஸ் அலர்ஜியில் தொடங்கி, உறுப்பு செயலிழப்பை கூட ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்காதீர்கள். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 20, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள்: GK வாசன்

தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக அணி வெற்றி அணியாக உருவெடுத்து இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எத்தனை அணிகள் வேண்டுமானாலும் களத்தில் நிற்கலாம். ஆனால் மக்களின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பது அதிமுக கூட்டணி மட்டுமே என அவர் கூறியுள்ளார். வரும் காலங்களில் அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரக்கூடிய பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக ஜி.கே.வாசன் பேசினார்.
News September 20, 2025
லீவுக்கு முந்தைய நாள் இரவுக்கு இப்படி ஒரு பவரா?

‘ஹைய்யா.. நாளைக்கு லீவு’ என்பது, பள்ளிக் காலம் தொட்டே நம்முடன் கலந்துள்ள உணர்வு. என்னதான் விடுமுறை நாள் நமக்கு இன்பத்தை கொடுத்தாலும், அதற்கு முந்தைய நாளின் மாலைப்பொழுது கொடுக்கும் நிம்மதியை எந்த நாளும் கொடுத்திட முடியாது. ‘நாளை ஒருநாள் லீவ் இருக்கிறது’ என்ற நினைப்புடனே, முந்தைய நாளை ரசித்து அனுபவித்து வருபவர்கள் பலர். நீங்கள் லீவுக்கு முந்தைய நாளை எப்படி கழிப்பீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க