News June 3, 2024

நள்ளிரவில் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் வேதனை

image

நாங்குநேரி சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு நாங்குநேரி சுங்கச் சாவடியில் கட்டணம் உயர்ந்தது. அதன்படி ஒரு வழி பயணத்திற்கு கார், ஜீப் கட்டணம் ரூ.110, மினி பஸ், வேன் ரூ.180, பேருந்து ரூ.375, மூன்று அச்சு வாகனங்கள் ரூ.410, நான்கு அச்சு வாகனங்கள் ரூ.590, ஏழு மற்றும் அதற்கு மேல் அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.715 என உயர்ந்தது.

Similar News

News July 6, 2025

ரூ.4 கூடுதல் கட்டணம் கேட்ட நடத்துநருக்கு ரூ.12,000 அபராதம்

image

நாங்குநேரியைச் சேர்ந்த கண்ணன், பார்வதிநாதன் ஆகியோர் நெல்லையிலிருந்து நாங்குநேரி சென்ற பஸ்ஸில் ஏறிய போது பைபாஸ் வழியாக செல்லும் என நடத்துனர் கூறினர். பின்னர் இருவரையும் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார். மேலும் டிக்கெட் கட்டணத்தில் ரூ.4 கூடுதலாக பெற்றார். இது குறித்து இருவரும் அளித்த புகாரின் படி நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து நடத்துனர் ரூ.12 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.

News July 6, 2025

நெல்லையில் வாகனங்கள் உரிமை கோராவிட்டால் ஏலம்

image

நெல்லையில் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமையாளர்கள் ஆவணங்கள், ஆதார் அட்டையுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆஜராகி, அபராதம் செலுத்தி வாகனங்களை மீட்கலாம். உரிமை கோரப்படாவிட்டால், வாகனங்கள் ஏலம் விடப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News July 6, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

நெல்லை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10, 12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். *உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க*

error: Content is protected !!