News June 3, 2024
திருச்சி சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் குறித்து அண்மையில் பாஜகவின் திருச்சி சூர்யா தெரிவித்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து வாசன் வேலியில் உள்ள திருச்சி சூர்யா வீட்டிற்கு சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாபர் தலைமையில் நேற்று பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
Similar News
News July 5, 2025
திருச்சி: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு?

திருச்சி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <
News July 5, 2025
திருச்சி காவல்துறை எச்சரிக்கை

திருச்சி காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீங்கள் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் இன்றே வன்முறைக்கு முடிவுகட்ட பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்கள் 1091 அழைக்க கூறியுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்கலாம். SHARE IT
News July 5, 2025
திருச்சி: ஓட்டுநர் கட்டுப்பட்டை இழந்த லாரி

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள அடைக்கம்பட்டி பகுதியில் இன்று பெரம்பலூர் பகுதியில் இருந்து துறையூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததால் நெல் மூட்டைகள் சாலையில் சிதறின. ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் துறையூர் – பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.