News June 3, 2024
தமிழகத்தில் இன்று வெயில் அதிகரித்து காணப்படும்

தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்தும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெயிலின் அளவு, வழக்கத்தைவிட 1-3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும்.
Similar News
News September 20, 2025
சூரிய கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை

இந்துமத நம்பிக்கையின் அடிப்படையில் <<17774785>>நாளை சூரிய கிரகணத்தின்<<>> போது செய்ய கூடாதவை: *நோயாளிகள் தவிர்த்து, மற்றவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம் *இந்த நாளில் புதிய திட்டங்களை தொடங்க வேண்டாம் *கிரகணத்தின் போது சமைக்க வேண்டாம் *கூரான பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்கவும் *சாப்பிடவோ அருந்தவோ கூடாது *கடவுள் சிலைகள், துளசி செடியை தொடுவதை தவிர்க்கவும். *உடலுறவை தவிர்க்கவும். இதை SHARE பண்ணலாமே.
News September 20, 2025
இயற்கையோடு வாழ்ந்தவர் இயற்கை எய்தினார்

‘தாவரங்களின் என்சைக்ளோபீடியா’ என்று போற்றப்படும் நாட்டின் தலைசிறந்த தாவரவியல் விஞ்ஞானி Dr.ஹேமா சானே (85) காலமானார். புனே கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிய இவர் ஓய்வுக்கு பின்பும் ஆய்வை தொடர்ந்தார். இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக சாகும்வரை மின்சாரத்தை பயன்படுத்தாத இவர், தன் சொத்துகளை தான் வளர்த்த நாய், பூனைகள், கீரிப்பிள்ளை மற்றும் பறவைகளுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
News September 20, 2025
விஜய்க்கு உடனுக்குடன் பதில் தரும் DMK

முதலீடுகள் பற்றி விஜய் விமர்சித்த நிலையில், <<17773206>>CM ஸ்டாலின்<<>> வீடியோ மூலம் பதிலளித்திருந்தார். நாகை ஹாஸ்பிடல் குறித்த குற்றச்சாட்டுக்கும் உடனடி பதில் தந்தார் மா.சுப்பிரமணியன். முன்னதாக, DMK vs TVK என்ற தவெகவின் நிலைப்பாட்டுக்கு, ‘இதற்கெல்லாம் பதிலளிக்க அவசியமில்லை’ என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு CM, DCM முதல் அமைச்சர்கள் வரை பதிலளித்து வருவது பேசுபொருளாகியுள்ளது.