News June 3, 2024
கருணாநிதிக்கு இன்று 101ஆவது பிறந்தநாள்

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3ஆம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே பொது வாழ்க்கையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த அவர், தமிழக அரசியல் 5 முறை முதல்வராகவும், களத்தில் 13 முறை MLAவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 20, 2025
ரசிகர் கூட்டம் குற்றச்சாட்டுக்கு விஜய் பதிலடி

விஜய்க்கு கூடுவது ரசிகர் கூட்டம் என்றும், அந்த கூட்டம் வாக்காக மாறாது என்றும் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், இது சும்மா கூடிய கூட்டமல்ல, வாக்களிக்கும் கூட்டம் தான் என்று தொண்டர்களின் கோஷத்தை பதிலடியாக கொடுத்திருக்கிறார் விஜய். திருவாரூர் பரப்புரையில் பேசிய அவர், குடும்ப ஆதிக்கம் இல்லாத, ஊழலில்லாத தமிழகத்தை நோக்கியே நமது பயணம் என்றும் சூளுரைத்தார்.
News September 20, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கல்பட்டு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதனால், இரவில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
News September 20, 2025
சூரிய கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை

இந்துமத நம்பிக்கையின் அடிப்படையில் <<17774785>>நாளை சூரிய கிரகணத்தின்<<>> போது செய்ய கூடாதவை: *நோயாளிகள் தவிர்த்து, மற்றவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம் *இந்த நாளில் புதிய திட்டங்களை தொடங்க வேண்டாம் *கிரகணத்தின் போது சமைக்க வேண்டாம் *கூரான பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்கவும் *சாப்பிடவோ அருந்தவோ கூடாது *கடவுள் சிலைகள், துளசி செடியை தொடுவதை தவிர்க்கவும். *உடலுறவை தவிர்க்கவும். இதை SHARE பண்ணலாமே.