News June 3, 2024
கரைகிறதா காங்கிரஸ் கட்சி?

சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவைவிட (0.99%), காங்கிரஸின் (0.32%) வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், தற்போது நோட்டாவுடன் போட்டி போடும் நிலைக்கு சென்றுவிட்டதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் ராகுல், பிரியங்கா ஓடி ஓடி பிரசாரம் செய்தாலும், அது மக்கள் மத்தியில் பலிக்கவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுவதாக சிலர் கூறி வருகின்றனர்.
Similar News
News September 20, 2025
இந்த தண்ணீரை யூஸ் பண்ணா முடி அடர்த்தியா வளரும்

தேநீர் தூள் கொதிக்க வைத்த தண்ணீரை தலைக்கு தேய்ப்பதால் முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரும் என கூறப்படுகிறது. இதில் உள்ள கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் முடி உடைவதை தடுக்கிறதாம். அதோடு அதில் உள்ள காஃபின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி அடர்த்தியாக வளர உதவுவதாக கூறப்படுகிறது. இத நீங்க ட்ரை பண்ணியிருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 20, 2025
வீட்டு கடன் EMI குறைகிறது

வீட்டு கடனுக்கான MCLR (Marginal Cost of Funds based Lending Rate) விகிதத்தை வங்கிகள் குறைத்துள்ளன. இதனால் EMI தொகையில் கணிசமான தொகை சேமிப்பாகும். 6 மாத காலத்திற்கான MCLR-ஐ 8.65% ஆக HDFC குறைத்துள்ளது. BOB வங்கி: 10-15 அடிப்படை புள்ளிகள், IOB, IDBI, PNB, BOI ஆகிய வங்கிகளும் 5-15 அடிப்படை புள்ளிகள் வரை தங்களது MCLR-ஐ குறைத்துள்ளன. இது வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியை கொடுக்கும். SHARE IT.
News September 20, 2025
AI மூலம் UPSC தேர்வர்களின் அடையாளம் சரிபார்ப்பு

UPSC தேர்வுகளின் போது தேர்வர்களின் முக அடையாளங்களை உறுதிப்படுத்த AI மூலம் சோதனை செய்யும் நடைமுறை அறிமுகமாகியுள்ளது. சமீபத்தில் குருகிராமில் நடந்த தேர்வில் இம்முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்வர்களின் அடையாளங்களில் கூடுதல் பாதுகாப்பை அளிப்பதாகவும், தேர்வர்களின் சரிபார்ப்பு நேரத்தை 8-10 விநாடிகள் அளவு குறைப்பதாகவும் UPSC தெரிவித்துள்ளது. இது அடுத்தடுத்த தேர்வுகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது.