News June 2, 2024

மோடி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: முத்தரசன்

image

பிரதமரின் பரப்புரை மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சாதி, மத ரீதியான பிரச்னைகளை பிரதமர் பேசியதாக கூறிய அவர், இது எதுவும் பயன்பெறாத நிலையில் தானே கடவுள் என மோடி கூறி வருவதாகவும் விமர்சித்தார். வடக்கு, தெற்கு பிரிவினை கருத்துக்களை மோடி பேசியதாகவும், அதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.

Similar News

News September 20, 2025

மர்மம் நிறைந்த இடங்கள் PHOTOS

image

இந்தியா வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்ல, பல மர்மங்களும் நிறைந்த நாடாகும். சில இடங்கள், அறிவியலை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற மர்மம் நிறைந்த சில இடங்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று மர்மம் நிறைந்த வேறு ஏதேனும் இடம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 20, 2025

பழவேற்காடு சரணாலயத்தில் மதுக்கடை: அன்புமணி சாடல்

image

மது வணிகத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு திமுக அரசு செயல்படுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் நிறுவனம் விதிகளை மீறி மதுக்கடை நடத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழலை அழிக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் பறவைகள் சரணாலயத்தில், மதுக்கடைகளை அனுமதிப்பது சட்டவிரோதம் எனவும் அன்புமணி சாடியுள்ளார்.

News September 20, 2025

துயரத்திலும் கடமை தவறாத துனித் வெல்லாலகே

image

சமீபத்தில் தந்தையை இழந்த துனித் வெல்லாலகே, இலங்கை அணிக்காக செய்த செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது. தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு அவர், சூப்பர் 4 சுற்றில் விளையாடுவதற்கு துபாய் திரும்பியுள்ளார். சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொள்ளும் நிலையில், துனித் வெல்லாலகே போட்டிக்கு தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!