News June 2, 2024
திருச்சி அருகே விபத்து: ஒருவர் பலி

தொட்டியம் அருகே மேலக்கார்த்திகைப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்த பொன்னன் மகன் சுப்ரமணியன் (23). இவர் நேற்று இரவு கீழக் கார்த்திகைபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டிற்கு சுமார் இரவு 1 மணி அளவில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி
சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொட்டியம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வரும் 25-ம் தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் 12-ம் வகுப்பு பயின்ற உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கலந்து கொண்டு கல்வி கடன், உதவித்தொகை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று அறிவித்துள்ளார்.
News August 22, 2025
திருச்சி – காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:35 மணிக்கு இயக்கப்படும் திருச்சி – காரைக்கால் டெமு ரயில், பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக வரும் 24, 25, 27, 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து, திருவாரூர் ஜங்சன் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
திருச்சி: மக்களே உஷார்…! புதிய மோசடி

திருச்சி மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் அதில், உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்று பலர் ஏற்கெனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!