News June 2, 2024
சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். நந்தனம் YMCA வளாகம், பூக்கடை NSC போஸ் சாலை, YMCA கட்டிடம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொடர்ந்து, 3 இடங்களிலும் சோதனை நடத்தியதில் இந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News September 20, 2025
‘மதராஸி’ OTT ரிலீஸ் டேட்..

ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், படம் பாக்ஸ் ஆபிசில் ₹100 கோடி வசூலை கடந்தது. படம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான சூழலில், வரும் அக்டோபர் 3-ம் தேதி அமேசான் ப்ரைம் OTT-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. ருக்மிணி வசந்த, வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
News September 20, 2025
BREAKING: தங்கம் விலை Record படைத்தது.. இதுவே முதல்முறை

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹60 உயர்ந்து ₹10,290-க்கும், சவரனுக்கு ₹480 உயர்ந்து, ₹82,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வரலாற்றில் ₹82,320-க்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை. இனி வரும் நாள்களிலும் விலை குறையாது என கூறப்படுவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News September 20, 2025
தமிழ்நாட்டில் ”கஞ்சா” ஆம்லேட்: EPS

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் தாரளமாக கிடைப்பதால், தமிழக இளைஞர்கள் சீரழிவதாக EPS குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா சாக்லெட் வடிவத்தில் வந்துள்ளது; ஆம்லெட்டில் கூட கஞ்சாவை கலக்கி விற்கிறார்கள் என சாடிய அவர், போதைப்பொருள் அதிகரிப்பு பற்றி சட்டசபையில் பலமுறை பேசினேன். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத CM, இப்போது தாமதமாக விழித்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட CM நமக்கு தேவையா என கேள்வி எழுப்பினார்.