News June 2, 2024

காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவர் பலி

image

வால்பாறை ஷேக்கல்முடி எஸ்டேட் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (18) கல்லூரி மாணவர். விடுமுறையை முன்னிட்டு தனது நண்பர் சந்தோஷ் உடன் நேற்று வீட்டுக்கு வந்துள்ளார். புதுக்காடு எஸ்டேட் வழியாக பைக்கில் வந்தபோது வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டு யானைகள் இவர்களை தாக்கியது. இதில் யானை தாக்கியதில் முகேஷ் உயிரிழந்தார். வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 18, 2025

ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க உத்தரவு!

image

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை நல்ல முறையில் இருப்பு வைக்க வேண்டும். மழை பெய்து வருவதால் ரேஷன் பொருட்கள் பாதிக்கக்கூடாது. பாதுகாப்பாக வைக்க வேண்டும். வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதியில் ரேஷன் கடைகளுக்கு காட்டு யானைகள் வந்து செல்வதாக தெரிகிறது. இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News August 18, 2025

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை வருகை!

image

கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் நேற்று இரவு விடுத்த அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (திங்கள்) காலை 11 மணியளவில் கோவை வருகிறார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின், அங்கிருந்து அவர் சூலூர் செல்கிறார். அங்குள்ள அண்ணா சீரணி அரங்கத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

News August 18, 2025

கோவை: டிகிரி போதும்.. LIC-யில் வேலை!

image

கோவை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT!

error: Content is protected !!