News June 2, 2024
தமிழகத்தில் பாஜக காலூன்றிவிட்டது?

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 2-4 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதற்கு, திமுக அரசு மீதான அண்ணாமலையின் விமர்சனம், அதிமுகவின் பலவீனம் ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மூலம் பாஜக அரசின் திட்டங்களை தெரியப்படுத்தியதால், மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News September 20, 2025
செப்டம்பர் 20: வரலாற்றில் இன்று

*1857 – கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விஸ்வாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றின. முதல் இந்திய சுதந்திர போர் முடிவுக்கு வந்தது. *1878 – தி இந்து செய்தி நிறுவனம் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது. *1971- தமிழ் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பிறந்தநாள். *1990 – இலங்கை சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டனர்.
News September 20, 2025
டீல் பேச அமெரிக்கா செல்லும் அமைச்சர்

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த சில நாள்களில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வர்த்தகம் தொடர்பாக, கடந்த 16-ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சரின் அமெரிக்க பயணம் என்பது, இருநாடுகளுக்கு இடையேயான 6-வது சுற்று வர்த்தக பேச்சுவார்த்தையாக அமைய உள்ளது.
News September 20, 2025
ஓஷோ பொன்மொழிகள்

*பயம் முடிகிற இடத்தில் வாழ்க்கைத் தொடங்குகிறது. *யாரோ ஒருவராகும் எண்ணத்தைக் கைவிடுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. உங்களிடம் மேம்படுத்த எதுவுமில்லை. விஷயம் என்னவெனில் இதை நீங்கள் உணர்ந்து, புரிந்து, ஏற்பது மட்டுமே. *காதலில் விழுவதன் மூலம் நீங்கள் குழந்தையாகவே இருக்கிறீர்கள். *உண்மை என்பது வெளியில் கண்டுபிடிக்கப்பட வேண்டியதில்லை. உள்ளூர உணரப்பட வேண்டியது.