News June 1, 2024
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை தி.மலை மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
திருவண்ணாமலை வழக்குகளை முடிக்க சூப்பர் வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட சமரச மையத்தின் சார்பாக நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க 90 நாட்கள் தொடர்ச்சியாக சமரசத்திட்டம் நடைபெற உள்ளது. ஜுலை 1 முதல் வாரத்தின் 7 நாட்களிலும் தி.மலை, ஆரணி, செங்கம், செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், தண்டராம்பட்டு, வந்தவாசி சமரச மையங்களில் சமரச திட்டம் நடைபெறுகிறது. இதன்மூலம் தீர்வு காணப்படும் வழக்கில் வழக்கு கட்டணத்தை முழுமையாக திருப்பி பெறலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*
News July 5, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.07.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
திருவண்ணாமலையில் 127 போலீசார் பணியிட மாற்றம்

தி.மலை மாவட்டத்தில் 127 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இருந்து 63 காவலர்கள் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றிய 64 ஏட்டுகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.