News June 1, 2024
NEWS 18: கேரளாவில் UDF வெற்றி

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான UDF 15 முதல் 18 தொகுதிகளை வெல்லும் என்று நியூஸ் 18 தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான LDF கூட்டணி 2 முதல் 5 தொகுதிகளை வெல்லும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 முதல் 3 தொகுதிகளை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
தமிழகத்தில் இன்றும் மழை வெளுக்கும்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல் வடதிசையில் நகர்ந்து, தற்போது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த நகர்வு காரணமாக இன்றும் TN-ல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆந்திர கடலோர பகுதியின் ஊடாக பயணித்து மேலும் வலுவிழக்ககூடும்.
News December 2, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிடில், பள்ளி, செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.
News December 2, 2025
வாக்காளர்களை கவர திமுகவின் மாஸ்டர் பிளான்

2026 தேர்தலையொட்டி 3 மெகா திட்டங்களை அறிவிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இம்மாதமே 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். மகளிர் உரிமைத்தொகை கிடைக்க புதிதாக விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கிலும் ₹1000 செலுத்தப்படவுள்ளது. மேலும், பொங்கல் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பும் வெளியாகவுள்ளது.


