News June 1, 2024
கூடலூர் தெருக்களில் மூலிகை செடி

தேனி மாவட்டம் கூடலூரில் சோலைக்குள் கூடல் அமைப்பின் சார்பில் இன்று கோட்டை மேடு, கர்ணம் பழனிவேல் பிள்ளை தெருக்களில் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவதற்கு குழிதோண்டும் பணிகளும், அழகர் கோயில் வளாகத்தில் கவாத்து எடுக்கும் பணிகளும் நடைபெற்றது. இதில் சோலைக்குள் கூடல் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 6, 2025
தேனியில் கண்காணிப்பு பணியில் 600 போலீசார்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பு வீரர்கள் பணிக்கான எழுத்து தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. தேனியில் 6 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 6,233 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா நேரடி கண்காணிப்பில் சுமார் 600 போலீசார் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 5, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (05.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 5, 2025
தேனி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.


