News June 1, 2024
சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு காமராஜர் விருது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023 2024 ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசு தொகையினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு.
Similar News
News April 21, 2025
விருதுநகரில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு அதிகாரி, விற்பனை ஆலோசகர் உள்ளிட்ட சில பிரிவுகளில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 19- 35 வயதிற்குர்பட்ட இளங்கலை பட்டம் பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<
News April 21, 2025
பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(41). இவர் அப்பகுதியில் ஏப்.17 அன்று நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்திய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பலத்த தீக்காயமடைந்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
News April 20, 2025
10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-40, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <