News June 1, 2024
குரூப் 4 தேர்வை எழுதும் 34352 பேர்

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் குரூப் 4 தேர்வை 96 மையங்களில் 34352 பேர் எழுதவுள்ளதாக ஆட்சியர் சாரு ஸ்ரீ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மன்னார்குடி நீடாமங்கலம் நன்னிலம் திருத்துறைப்பூண்டி வலங்கைமான் குடவாசல் மற்றும் திருவாரூர் ஆகிய 8 தாலுகா பகுதிகளில் 96 மையங்களில் 124 தேர்வறைகள் தேர்வுக்கு தயார் நிலையில் உள்ளன.
Similar News
News August 21, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட கீழநம்மகுறிச்சி சமுதாயக்கூடம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மூன்று மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதேபோல, மன்னார்குடி தாலுக்காவிற்கு உட்பட்ட உள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள விகேஎஸ் திருமண மண்டபத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News August 21, 2025
இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. தாட்கோ நிறுவனம் வழங்கும் இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகி அறிந்துகொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News August 21, 2025
திருவாரூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <