News June 1, 2024
மத்திய அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்!

மதுரை மாவட்டத்தில் தண்ணீர், மின்சாரம், விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கையில் சிக்கியவர்களை வீரத்துடன் செயல்பட்டு காப்பாற்றியவருக்கு மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகிறது. விருதுபெற தகுதியுள்ளவர்கள் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பம்’ என குறிப்பிட்டு விண்ணப்பத்தை ஜூன் 20க்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு அனுப்பலாம் என அறிவிப்பு
Similar News
News September 11, 2025
மதுரை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

மதுரை மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<
News September 11, 2025
மதுரையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில்

மதுரையில் இருந்து பீகாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 17-ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. மதுரை-பரூணி சிறப்பு ரயில் வண்டி எண் 06059 மதுரையில் இருந்து வருகிற 17-ஆம் தேதி 24ஆம் தேதி மற்றும் நவம்பர் 3,15 ,22, 29 இயக்கப்பட இருக்கிறது. அதேபோன்று மறு மார்க்கமாக வண்டி எண் 06060 வருகிற 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமை புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு மதுரை வந்தடையும்.
News September 11, 2025
மதுரையில் ஒரே நாளில் 10 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் பசும்பொன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று வாசல் தெளித்து கொண்டிருந்த மூதாட்டி, வயலில் வேலை செய்த விவசாயி, வீட்டின் முன் பாத்திரம் துலக்கிய சிறுமி, பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவன் என 10பேரையும், ஆடு,மாடு, கோழிகளை கடித்து குதறியது. காயமடைந்தவர்கள் ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். உங்க கருத்தை கீழே பதிவிடலாம்.