News June 1, 2024

கோலம் போட்ட மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

image

மதுரை அனுப்பானடி பாபு நகரை சேர்ந்தவர் திலகவதி(62). இவர் நேற்று காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி திலகவதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்று மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Similar News

News September 11, 2025

மதுரையில் ஹரியானா மாநிலத்தவர் பரிதாபமாக பலி

image

ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தென்கரை அருகே லாரி வந்தபோது லாரியை நிறுத்தி உதவியாளர் முஃபீத் சாலையோரம் இயற்கை உபாதைக்காக சென்றார். திருப்பி வரும்போது பின்னாலிருந்து வந்த லாரி அவர் மீது மோதியதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.

News September 11, 2025

மதுரை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

மதுரை மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<> இங்கு கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 11, 2025

மதுரையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில்

image

மதுரையில் இருந்து பீகாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 17-ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. மதுரை-பரூணி சிறப்பு ரயில் வண்டி எண் 06059 மதுரையில் இருந்து வருகிற 17-ஆம் தேதி 24ஆம் தேதி மற்றும் நவம்பர் 3,15 ,22, 29 இயக்கப்பட இருக்கிறது. அதேபோன்று மறு மார்க்கமாக வண்டி எண் 06060 வருகிற 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமை புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு மதுரை வந்தடையும்.

error: Content is protected !!