News June 1, 2024

திண்டுக்கல் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

image

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் SK.நகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டி இரட்டை விபத்து ஏற்படுத்திவிட்டு வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் தப்பி ஓடியுள்ளார். அவரை கைது செய்ய வலியுறுத்தியும், விஜயக்குமாருக்கு ஆதரவாக உண்மையை மறைத்து புனைவழக்கு பதிந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு அப்பாவிகளை கைது செய்வதைக் கண்டித்தும் பொதுமக்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News September 11, 2025

திண்டுக்கல்: தலையை வெட்டி கொலை செய்த இருவர் கைது

image

திண்டுக்கல்: வக்கம்பட்டி அருகே மைக்கேல்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் (37) என்பவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கோபிகண்ணன் (27), தேவசூர்யா (20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 11, 2025

திண்டுக்கல்: காதலன் துணையுடன் கணவன் கொலை!

image

திண்டுக்கல்: சிலுக்குவார்பட்டியை அடுத்த எல்லைசாமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(45). இவரது மனைவி பழனியம்மாளுக்கும், சூர்யா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில், இவர்களது தகாத உறவிற்கு இடையூறாக இருந்த கணவர் மாரியப்பனை மனைவி பழனியம்மாள், காதலன் சூர்யா ஆகிய இருவரும் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். இந்நிலையில், தற்போது போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 11, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (செப்.10) இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!