News June 1, 2024
விரைவில் ரேவண்ணாவின் மனைவி கைது?

பெண் கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி பவானிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் அவரும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 19, 2025
Sports Roundup: தமிழ் தலைவாஸ் அணியில் அருளானந்த பாபு

*சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி. *புரோ கபடி லீக்கில் இன்று தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் மோதல். *உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம். * தமிழ் தலைவாஸ் அணியில் அருளானந்த பாபு இணைந்துள்ளார். * ஃபிஃபா தரவரிசையில் ஒரு இடம் சறுக்கி இந்தியா 134-வது இடம் பிடித்துள்ளது.
News September 19, 2025
தனியாக இருக்கும் போது நீங்க என்ன பண்ணுவீங்க?

பிறருடன் இருப்பதை விட, தனிமையில் இருக்கும்போது ஒருவரின் குணத்தில் பெரிய மாற்றங்களை காண முடியும். நம்மை Judge செய்ய முடியாது என்ற தைரியத்தில் பல விநோதமான பழக்கங்களும் வெளிவரும். மொக்கையாக இருந்தாலும் பிடித்த படத்தை பார்ப்பதில் தொடங்கி, பாடுவது, டான்ஸ் ஆடுவது, புத்தகம் படிப்பது, சமைப்பது என பல வேலைகளிலும் ஈடுபடுவோம். அப்படி நீங்க தனியாக இருக்கும் போது, என்ன பண்ணுவீங்க?
News September 19, 2025
BREAKING: ₹18,000 வரை விலை குறைந்தது!

GST சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கார், பைக்குகளின் விலைகளை குறைத்து ஒவ்வொரு நிறுவனங்களாக அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சுசுகி நிறுவனமும் இணைந்துள்ளது. அதன்படி Access (₹8,523), Avenis (₹7,823) Burgman Street (₹8,373), GIXXER (₹11,520), GIXXER 250 (₹16,525), V-Strom SX (₹17,982) விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.