News May 31, 2024

குடிபோதையில் விபத்து, பொதுமக்கள் சாலை மறியல்

image

குடிபோதையில் வாகனம் ஓட்டி இரட்டை விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வழக்கறிஞர் விஜயகுமாரை கைது செய்ய வலியுறுத்தியும் விஜயக்குமாருக்கு ஆதரவாக உண்மையை மறைத்து புனைவழக்கு பதிந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு அப்பாவிகளை கைது செய்வதைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்  அய்யலூர் SK.நகரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்து வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Similar News

News September 11, 2025

திண்டுக்கல்லில் கிரைண்டர் மானியம் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன், 70 மகளிருக்கு உலர் & ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் பெண்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு வரும் செப்.19ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 11, 2025

திண்டுக்கல்: தலையை வெட்டி கொலை செய்த இருவர் கைது

image

திண்டுக்கல்: வக்கம்பட்டி அருகே மைக்கேல்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் (37) என்பவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கோபிகண்ணன் (27), தேவசூர்யா (20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 11, 2025

திண்டுக்கல்: காதலன் துணையுடன் கணவன் கொலை!

image

திண்டுக்கல்: சிலுக்குவார்பட்டியை அடுத்த எல்லைசாமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(45). இவரது மனைவி பழனியம்மாளுக்கும், சூர்யா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில், இவர்களது தகாத உறவிற்கு இடையூறாக இருந்த கணவர் மாரியப்பனை மனைவி பழனியம்மாள், காதலன் சூர்யா ஆகிய இருவரும் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். இந்நிலையில், தற்போது போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!