News May 31, 2024
ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி பொறியாளர் சஸ்பென்ட்

நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியம். பல்வேறு பணிகளில் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியிழப்பு ஏற்படுத்தியதாக ஏற்கனவே தணிக்கை துறை அதிகாரிகள் இவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தனர். அதற்கு உரிய விளக்கமளிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யபட்டார்.
Similar News
News November 6, 2025
குமரி: Grindr செயலி மூலம் மோசடி – எஸ் .பி .எச்சரிக்கை

குமரி எஸ் பி ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு; Grindrசெயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி இதில் உள்ளது. இதன் மூலம் சில நபர்கள் பொது மக்களை குறிப்பாக இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
News November 5, 2025
குமரி: காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் அணில் என்பவரது மகள் லியா. சிறுமி கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு தனியார் மருத்துவ மையங்களில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி லியா பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆறு காணி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News November 5, 2025
குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


