News May 31, 2024
நான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்: கெஜ்ரிவால்

ஜூன் 2ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி, தான் திகார் சிறைக்கு திரும்பிச் செல்லவுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாஜகவினர் தன் குரலை ஒடுக்க முயற்சித்தனர் எனக் கூறிய அவர், சிறையில் பாஜகவின் ஆதரவு பெற்ற சிறைத்துறை அதிகாரிகள் தன்னை சித்ரவதை செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறினார். எனினும், அதற்கெல்லாம் தான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
உதயநிதி சொல்வதை மட்டும் கேளுங்க: K.N.நேரு

கருணாநிதிக்கு இருக்கும் ஞானம், திறமை, போர்க்குணம் என அனைத்தும் உதயநிதிக்கு இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இளைஞரணி செயலாளர் முதல் துணை முதல்வர் வரை ஒவ்வொரு பொறுப்பையும் உதயநிதி சரியாக நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உதயநிதி என்ன சொல்கிறாரோ அதை தட்டாமல் செய்தாலே போதும், வரும் தேர்தலில் திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என நிர்வாகிகளுக்கு கூறியுள்ளார்.
News November 28, 2025
BREAKING: வேகமாக நெருங்கும் புயல்.. கனமழை வெளுக்கும்

நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கெனவே <<18409565>>NDRF குழுக்கள்<<>> டெல்டாவுக்கு விரைந்துள்ளன. மேலும், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் மணிக்கு 7 KM வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது.
News November 28, 2025
UAN லாக் இன் செய்யாமல் PF பேலன்ஸ் செக் பண்ணனுமா?

‘9966044425′ என்ற எண்ணிற்கு, PF கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் கொடுத்தால், PF பேலன்ஸ் தொகை SMS-ல் வந்துவிடும். அதேபோல், ‘7738299899′ என்ற எண்ணுக்கு ‘EPFOHO UAN ENG’ என டைப் செய்து SMS அனுப்பினாலும், PF பேலன்ஸ் தொகையை பார்க்கலாம். இதற்கு உங்கள் UAN ஆக்டிவாகவும், KYC அப்டேட்டும் செய்திருப்பது அவசியம். ஷேர் பண்ணுங்க.


