News May 31, 2024
அஜித்துடன் இணையும் பிரேமலு நாயகன்

ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இதன் படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிரேமலு’ திரைப்படத்தின் கதாநாயகன் நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Similar News
News August 26, 2025
ஜனநாயகன் படத்தில் விஜய் அறிமுக காட்சி.. கசிந்த தகவல்

விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இதில், விஜய்யின் அறிமுக காட்சி, எம்ஜிஆர் போட்டோவை காட்டிவிட்டு அப்படியே அவரது முகம் தெரிவதுபோல் அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தின் FIRST LOOK போஸ்டர் கூட ‘எங்க வீட்டு பிள்ளை’ பட எம்ஜிஆர் பாணியில் விஜய் சாட்டையை சுழற்றுவது போன்று வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
News August 26, 2025
டிரெண்டிங்கில் யூரி ககாரின்…. யார் இவர் ?

அனுமன் பற்றிய <<17507921>>அனுராக் தாக்கூரின்<<>> பேச்சால் X தளத்தில் யூரி ககாரின் பெயர் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. விண்வெளிக்கு முதலில் சென்றவர் சோவியத் யூனியனின் யூரி ககாரின் தான். அவர் ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டு வோஸ்டாக் 1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார். தொடர்ந்து வோஸ்டாக் 1 விண்கலம் மணிக்கு 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை ஒரு முறை சுற்றியது. இந்த விண்வெளி பயணம் 108 நிமிடங்கள் நீடித்தது.
News August 26, 2025
மோடி சிறைக்கு சென்றால்.. அமித்ஷா சொல்வது இதுதான்!

பதவி பறிப்பு மசோதா குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, PM மோடி சிறைக்கு சென்றால் அவரும் கூட பதவியை இழப்பார் எனத் தெரிவித்துள்ளார். மோடி அவருக்கு எதிராகவே ஒரு அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வந்து இருப்பதாக குறிப்பிட்ட அவர், முதல்வரோ, பிரதமரோ அல்லது எந்தவொரு தலைவரோ சிறையில் இருந்தவாறு நாட்டை வழிநடத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.