News May 31, 2024
கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா

பல்லடம் தபால் அலுவலக வீதியில் உள்ள நாராயணபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தெய்வசிகாமணியின் நிலத்தை மோசடியாக பட்டா மாறுதல் மற்றும் பத்திரப்பதிவு செய்து சிலர் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
Similar News
News August 15, 2025
திருப்பூர்: பல்லடம் புத்தரச்சல் 108 பைரவர் ஆலயம்!

திருப்பூர், பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில், புகழ்பெற்ற 108 பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 21 அடி உயரத்தில் கால பைரவர் சிலை உள்ளது. சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். அஷ்டமி நாளான நாளை (ஆக.16), 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News August 15, 2025
திருப்பூர் சுதந்திர தின கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், முதல்வர் மனோன்மணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
News August 15, 2025
திருப்பூரில் சுதந்திர தின விழா; கலெக்டர் கொடியேற்றி வைத்தார்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் இன்று காலை சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மணிஷ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் சமாதான புறா பறக்க விடப்பட்டது. தொடர்ந்து 68 பயனாளிகளுக்கு ரூ.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.