News May 31, 2024
கர்ப்பிணிகள் பதிவு செய்ய புதிய இணையதளம்

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் நேற்று கூறியதாவது, கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப பதிவு தமிழ்நாடு அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள பிக்மி 3.0 எனும் புதிய இணையதளம் மூலம் தாங்களாகவே பதிவு செய்யலாம். இந்த புதிய இணையதளத்தில் ஒவ்வொரு கற்பணியும் செவிலியர் இல்லாமலே கர்ப்ப பதிவை picme3.tn.
gov.in என்னும் இணையதளம் மூலம் பதிவு செய்து RCH – ID பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
Similar News
News September 15, 2025
சுத்தமல்லியில் அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பைச் சேர்ந்த 13 மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறுவர் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், பள்ளிகளில் ஏற்படும் வன்முறை சம்பவங்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
News September 15, 2025
நெல்லை : பட்டாவில் திருத்தமா??

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு நெல்லை மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!
News September 15, 2025
நெல்லை: மாணவர்களுக்கு புதிதாக திறன் வினாத்தாள்

காலாண்டு பொதுத் தேர்வு 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் இன்று தொடங்கியது. இட்டேரி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் தேர்வை ஆர்வமாக எழுதினர். இதில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முதல் முறையாக “திறன்” என்ற தலைப்பில் சிறப்பு வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டது. மெல்ல கற்க்கும் மாணவர்களை ஊக்குவிக்க கல்வித்துறை முதல் முறையாக இந்த நடைமுறை அமல்படுத்ததியது.