News May 31, 2024
AI தொழில்நுட்பம் அச்சுறுத்துகிறது

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக ஹாலிவுட் முன்னணி நடிகை ஜெனிஃபர் லோபஸ் தெரிவித்துள்ளார். அதனைக் கொண்டு, நமது முகங்களை மற்றவர்கள் பயன்படுத்துவது ஆபத்தானது என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த வாரம் தனது குரல் திருடப்பட்டிருப்பதாக நடிகரை ஸ்கார்லெட் ஜான்சன் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 19, 2025
இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கியது

குரேஷியாவில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் வெண்கலம் வென்றுள்ளார். ஸ்வீடன் வீராங்கனை ஜோனா டெனிஸை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். போட்டி தொடங்கியது முதல் சக வீரர் தகுதி நீக்கம், பதக்கம் வெல்லாதது என இந்திய வீரர்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்ட நிலையில், இந்தியா வெறும் கையுடன் திரும்பாது என்பதை அண்டிம் உறுதி செய்துள்ளார்.
News September 19, 2025
காசு கொடுத்து மீம்ஸ் போட சொல்கிறார்கள்: பிரியங்கா

உங்களுக்கு நடிக்கவும், டான்ஸ் ஆடவும் தெரியவில்லை என மீம்ஸ் வருகிறதே என நடிகை பிரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தன்னை பிடிக்காதவர்கள் காசு கொடுத்து தனக்கு எதிராக மீம்ஸ் போட சொல்வதாகவும், ஆனால் இதற்கெல்லாம் மனசு உடைந்து போக மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் தன்னை திடப்படுத்திக் கொண்டு வருவதாகவும், யார் மீம்ஸ் போட்டால் தனக்கு என்ன என கோபமாகவும் பதிலளித்துள்ளார்.
News September 19, 2025
நேதாஜி பொன்மொழிகள்

*சரித்திரம் வலிமையனாது. இதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் எளிதானவை அல்ல. *தன்னை மாற்றுவதற்கு தயாராக இருப்பவனே உலகத்தை மாற்றுவதற்கு தகுதியனாவன். * உண்மையான நண்பனாக இரு, இல்லாவிட்டால் உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ அரை நம்பிக்கை உடையவனாக இருக்காதே. * ஒருவொருக்கு ஒருவர் விட்டு கொடுக்காது போனால் அரை நிமிடங்கள் கூட இவ்வுலகத்தில் நாம் வாழ்வை நடத்த முடியாது.