News May 31, 2024

மாநகராட்சி ஆணையாளருக்கு அழைப்பு

image

மதுரை நகைக்கடை பஜாரில் இயற்கை ஆர்வலர்கள் இணைந்து வரும் 2ம் தேதி மரக்கன்றுகள் நடவு செய்யும் திருவிழா நடத்த உள்ளனர். இந்த விழாவிற்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமாரை தலைமையேற்று தொடக்கி வைக்க இன்று நேரில் அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்வில் மு. ரா.பாரதி, செந்தூர் பாண்டியன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 11, 2025

எங்கள் வழி தனி வழி – டிடிவி தினகரன்

image

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்; தேவையென்பதை உணர வேண்டும். செங்கோட்டையன் உள்ளிட்ட யார் எடுக்கிற முயற்சியும் நடக்காது என்பது எனக்கு தெரியும். பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனியாக தான் இருக்கும். எங்கள் வழி தனி வழி நாங்கள் அமைகின்ற கூட்டணி தான் ஆட்சியில் அமர போகிற கூட்டணி என்றார்.

News September 11, 2025

மதுரை: தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிரடி..!

image

மதுரை மாநகராட்சி சுகாதாரதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை கார்ப்பரேஷன் வழங்கிய வெறிநாய் தடுப்பூசி மாநகராட்சி நிர்வாகம் நகரில் ஆயிரத்திற்கும் அதிகமான நாய்களுக்கு போடப்பட்டது. அடுத்தகட்டமாக மேலும் ஆயிரம் தெரு நாய்கள் கண்டறியப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடக்க இருக்கிறது. நகரில் 38 ஆயிரம் தெரு நாய்கள் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து தடுப்பூசி பணிகள் நடைபெறும் என்றார்.

News September 11, 2025

மதுரையில் ஹரியானா மாநிலத்தவர் பரிதாபமாக பலி

image

ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தென்கரை அருகே லாரி வந்தபோது லாரியை நிறுத்தி உதவியாளர் முஃபீத் சாலையோரம் இயற்கை உபாதைக்காக சென்றார். திருப்பி வரும்போது பின்னாலிருந்து வந்த லாரி அவர் மீது மோதியதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.

error: Content is protected !!