News May 31, 2024
விக்கிரவாண்டி அருகே 3 கார்கள் மோதி விபத்து

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே நேற்று(மே 30) வேகமாக வந்த கார், சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதியது. இதை தொடர்ந்து பின்னால் வந்த 2 கார்களும் மோதி சாலையின் குறுக்கே நின்றது. அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
விழுப்புரம்: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்த கையேடு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் (ம) தகவல் கையேடு வழங்கும் பணி 07.07.2025 முதல்
தொடங்கவுள்ளது. தொடர்ந்து 15.07.2025 முதல் முகாம்கள் நடைபெறவுள்ளது.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.
News July 6, 2025
கால் மாற்றி அறுவை சிகிச்சை விசாரணைக்கு உத்தரவு

விழுப்புரம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த நடத்துநர் மாரிமுத்துவிற்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு விசாரணை செய்ய இன்று ஜூலை 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News July 6, 2025
மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்

மகளிர் உரிமை தொகை பெற நாளை ஜூலை 7 முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.