News May 31, 2024

10 ரூபாய் நோட்டுகளை காணவில்லை!

image

₹10 ரூபாய் தாள்களை எப்போது கடைசியாக பார்த்தீர்கள்? அவற்றின் புழக்கம் பொது வெளியில் கணிசமாகக் குறைந்துள்ளதை உணர முடிகிறது. ஆனால், அதற்கான காரணம் எதையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அதிகளவில் வெளியிடுவதாகவும் அவையே புழக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீங்கள் எப்போது 10 ரூபாய் தாளை கடைசியாகப் பார்த்தீர்கள்?

Similar News

News August 25, 2025

சிறையில் இருந்தே அரசை நடத்த வேண்டுமா? அமித்ஷா

image

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக சிறை செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கும் போக்கு உருவாகியுள்ளதாக அமித்ஷா சாடியுள்ளார். சிறையில் இருந்தே யாராவது அரசை நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

News August 25, 2025

பொது அறிவு வினா- விடை பதில்கள்!

image

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17510524>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. மத்திய பிரதேசம்.
2. தொடை எலும்பு (Femur)
3.1982
4. அரசமரம்
5. சாய்னா நேவால் (2012)
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

News August 25, 2025

விஜய் மீது மிக அசிங்கமான தாக்குதல்.. கேட்கவே காது கூசுது

image

ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் கூறியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை நடிகைகளுடன் இணைத்து பேசி, திமுக MLA கே.பி.சங்கர் அநாகரிகமாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு த்ரிஷா கூட போலாமா, கீர்த்தி சுரேஷ் கூட போலாமா என்றுதான் தெரியும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது; ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால், துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று மோசமாக பேசியுள்ளார்.

error: Content is protected !!