News May 31, 2024
‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளைத்துரை சஸ்பெண்ட்!

திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளைத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2013இல் சிவகங்கையில் பணியிருந்தபோது, நடந்த கைதி ஒருவரின் காவல் நிலைய மரணத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை முடிவில் தெரியவந்தது. இந்நிலையில், பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் அவர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News August 25, 2025
2026 தேர்தலுடன் திமுக கதை முடிந்துவிடும்: EPS

2021 பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியில் 10% கூட நிறைவேற்றவில்லை என்று EPS குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக கேஸ் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதை பற்றி கேட்டால், 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சையாக பொய் சொல்கிறார்கள் என சாடிய அவர், 2026 தேர்தலுடன் திமுக கதை முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
SPACE: நிலா யாருக்கு சொந்தம்? அங்க இடம் வாங்கமுடியுமா?

அனைவரும் பார்த்து ரசிக்கும் நிலவில், சிலர் நிலம் வாங்கி போட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை என 1967-ல் ஐநாவின் The Outer Space Treaty ஒப்பந்தம் சொல்கிறது. விண்வெளியில் உள்ள நிலா, கோள்கள், இவ்வளவு ஏன் ஒரு விண்கல்லை கூட எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாது, அங்கு அணு ஆயுத சோதனைகளை நடத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்தவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. SHARE.
News August 25, 2025
BREAKING: திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி நீக்கம்?

திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி(MMK) உள்ளிட்ட <<17514578>>6 கட்சிகளுக்கு<<>> ஏன் தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி ECI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தாததால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை சென்னையில் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.