News May 31, 2024

மதுரையில் வாட்டி வதைத்த வெயில்!

image

மதுரையில் கடந்த வாரம் கனமழை பெய்து மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மதுரை மாநகர் மற்றும் மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

Similar News

News July 11, 2025

இன்று முதல் 2 சூப்பர் பாஸ்ட் ரயில்களின் நேரம் மாற்றம்

image

சென்னை சென்ட்ரல்-போடிநாயக்கனூர், மைசூர்-தூத்துக்குடி ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேகம் அதிகரித்தல் காரணமாக நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.10 மணிக்கு மதுரை வரவேண்டிய போடி எக்ஸ்பிரஸ் 6.40 மணிக்கே வந்துவிடும். அதேபோல் 7.35 மணிக்கு வர வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் 7.25 மணிக்கு வந்தடைந்து விடும். எனவே பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும்படி தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.

News July 10, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எழுதப்படிக்க தெரிந்தோர் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
” பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 29க்குள் அலுவலகத்தில் வழங்க வேண்டும் ” என்று மதுரை வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!