News May 31, 2024

பவுலிங்கில் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார்: ரிக்கி பாண்டிங்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார் என்று கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், “இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் பும்ரா பேட்ஸ்மேன்களை திணறடித்து, விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அத்துடன், ரன் எடுப்பதையும் குறைக்கிறார். அவரால் புதிய பந்தில் ஸ்விங் செய்ய முடியும்” என்றார்.

Similar News

News November 28, 2025

BREAKING: சென்னைக்கு அருகில் ‘டிட்வா’ புயல்

image

‘டிட்வா’ புயல் வேகமாக கரையை நோக்கி நகர்ந்து வருவதாக IMD தெரிவித்துள்ளது. தற்போது, புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 KM தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 KM தொலைவிலும் உள்ளது. இது, வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நாளை மறுதினம் அதிகாலையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் ஒரு வாரத்திற்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $10.21 குறைந்து $4,157-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $0.46 டாலர் உயர்ந்து $53.59 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹240 குறைந்து ₹94,160-க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News November 28, 2025

விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும்: திருமாவளவன்

image

பாஜகவுடன் விஜய் இணக்கமாக செல்வது, அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகியதற்கு பின்னால் BJP, RSS உள்ளதோ என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், அதிமுகவை பலவீனப்படுத்தும் செயலில் பாஜக இறங்கியிருப்பதாகவும் திருமா கூறியிருந்தார்.

error: Content is protected !!