News May 31, 2024
நெல்லை ரயில் பயணிகள் கவனத்திற்கு..!

இன்று(மே30) இரவு 12 மணி முதல் 36 மணி நேரம் மும்பையில் நடைமேடைகளை சீரமைக்கும் பணி நடப்பதால் தாதர்-மும்பை இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தானே ரயில்நிலைய நடைமேடைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால் நேற்று(மே 30) இரவு 12 மணி முதல் ஞாயிறு(ஜூன் 2) இரவு வரை ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நெல்லை மக்கள் அதற்கு ஏற்ப பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளலாம்.
Similar News
News July 5, 2025
நெல்லை இஸ்ரோ மையத்தில் ககன்யான் சோதனை வெற்றி

நெல்லை காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான எஸ்எம்எஸ்டிஎம் மாடல் இன்ஜின் 4-ம் கட்ட பரிசோதனை 130 வினாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ நேற்று (ஜூலை 4, 2025) தெரிவித்தது. முதல் கட்டமாக 30 வினாடிகள், இரண்டாம் கட்டமாக 100 வினாடிகள் சோதனை நடந்த நிலையில், இந்த வெற்றியால் இஸ்ரோ வட்டாரம் மகிழ்ச்சியடைந்துள்ளது.
News July 5, 2025
நெல்லையில் 100% மானியம் பெற அழைப்பு

தமிழக அரசு தொடங்கிய “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை” முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் தக்காளி, வெண்டைக்காய், மிளகாய் விதைகள் மற்றும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடிகள் 100% மானியத்தில் வழங்கப்படும். மொத்தம் 34,350 காய்கறி விதைத் தொகுப்புகள், 21,150 பழச்செடிகள் விநியோகிக்கப்பட உள்ளன. விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
News July 5, 2025
மூலைக்கரைப்பட்டியில் கடன் வசூலிக்க சென்றவர் மீது தாக்குதல்

மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரின்ஸ், வண்ணாரப்பேட்டை வங்கியில் பெற்ற டிராக்டர் கடனின் மூன்று மாத தவணையை செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கி ஊழியர் மாரியப்பன் நேற்று (ஜூலை.04) கடன் தொகை கேட்டு பிரின்ஸை அணுகியபோது, பிரின்ஸ் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் பிரின்ஸை வலைவீசி தேடி வருகின்றனர்.