News May 31, 2024
தமிழ்நாட்டில் இரண்டு நாள்களுக்கு கனமழை

தென் தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஜூன் 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாள்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 9, 2025
இவங்க தான் டிரம்ப் பேத்தி

US ஓபன் டென்னிஸை நேரில் காண வந்த டிரம்ப் குடும்பத்தால் சலசலப்பு ஏற்பட்டது. அதிபர் டிரம்புடன், அவரது மகள் இவான்கா, மருமகன் ஜரெட் குஷ்னர், பேத்தி அரபெல்லா ரோஸ் போட்டியை கண்டுகளித்தனர். அப்போது சர்வதேச ஊடகங்கள் மொத்தமும் 13 வயதான அரபெல்லாவை முன்னிலைப்படுத்தி காண்பித்தன. இந்நிலையில் தாத்தா டிரம்புடன் பேத்தி அரபெல்லா பேசும் வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது.
News September 9, 2025
விஜய் உயிரை கொடுத்து வேலை செய்யணும்: கருணாஸ்

கார்ப்ரேட் கம்பெனி போல் வீட்டிற்குள் இருந்தபடி விஜய் அரசியல் செய்வது பயனளிக்காது என கருணாஸ் விமர்சித்துள்ளார். திரைப்புகழை வைத்து மட்டுமே ஆட்சியை பிடிக்கலாம் என விஜய் நினைப்பது, தனக்கு நகைப்பை ஏற்படுவத்துவதாக அவர் கூறினார். விஜய் ஆட்சிக்கு வர நினைத்தால் மக்களின் பிரச்னைகளை அறிந்து அதற்காக உயிரை கொடுத்து வேலை செய்ய வேண்டும் எனவும் கருணாஸ் குறிப்பிட்டார்.
News September 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 453 ▶குறள்: மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். ▶பொருள்: மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனதால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.