News May 30, 2024

ஜூன் 4ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள பார்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 28, 2025

காஷ்மீர் மக்களுக்கு நாங்க இருக்கோம்: பாக்., PM

image

இந்திய ராணுவம் 1947-ல் காஷ்மீரை ஆக்கிரமித்ததாக கூறி, ஆண்டுதோறும் அக்.27-ஐ கருப்பு நாளாக பாக்., கடைப்பிடித்து வருகிறது. இதனையொட்டி PAK PM ஷெபாஸ் ஷெரீப் & PAK அதிபர் ஆசிப் அலி சர்தாரி, காஷ்மீர் மக்களையும், அவர்களின் உரிமையையும் இந்தியா நிராகரிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை எனவும், அவர்களுடன் 24 கோடி பாகிஸ்தானியர்கள் நிற்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

News October 28, 2025

Rohit அதிரடியாக விளையாட விரும்பவில்லை: முகமது கைஃப்

image

ஆஸி.,க்கு எதிரான முதல் ODI போட்டியில் சொதப்பிய ரோஹித், 2-வது (73 ரன்கள்), கடைசி (121 ரன்கள்) போட்டிகளில் ரன்களை குவித்தார். தனது ரன்களை வைத்தே ரசிகர்கள் தன்னை மதிப்பிடுவார்கள் என்பதை ரோஹித் புரிந்து வைத்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 20 பந்துகளில் 40 ரன்கள் என்ற அதிரடி விளையாட்டை ரோஹித் விளையாட விரும்பவில்லை என்ற அவர், களத்தில் நீண்ட நேரம் இருக்க விரும்புவதாகவும் கூறினார்.

News October 28, 2025

கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

image

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. ₹100 கொடுத்தால் போதும் போராட்டத்துக்கு வந்துவிடுவார்கள் என மூதாட்டி ஒருவரை கேலி செய்யும் வகையில், பகிரப்பட்ட Meme-ஐ கங்கனா ரனாவத் Retweet செய்திருந்தார். இதற்கு எதிராக மூதாட்டியின் கணவர் பஞ்சாப் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று ஆஜரான கங்கனா தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார்.

error: Content is protected !!