News May 30, 2024
எக்ஸிட் போலுக்கான நிபந்தனைகள் என்ன?

வாக்காளர்கள் மீது கருத்துக்கணிப்புகள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, கடைசிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகே, Exit Poll முடிவுகளை வெளியிட முடியும். கருத்துக்கணிப்பு நடத்தும் ஊடகங்கள் சார்புதன்மையற்ற செயல்முறையை உறுதி செய்வதோடு, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதும் கட்டாயம். கருத்துக்கணிப்பு நடத்துவதற்கான காலத்தை ஆணையம் ஒழுங்குப்படுத்தும்.
Similar News
News October 28, 2025
5 ஆண்டுக்கும் நானே CM: சித்தராமையா

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆகியோர் 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பதவியை விட்டுத்தர விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், காங்., மேலிட முடிவுகளுக்கு உட்பட்டு, 5 ஆண்டுகளுக்கும் தானே CM ஆக நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
News October 28, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 28, ஐப்பசி 11 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News October 28, 2025
Suriya 46 படத்தில் இணைந்த ரவீனா

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா, தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். ‘Ala Vaikuntapuramlo’ என்ற அல்லு அர்ஜுனின் படம் போன்று ஃபேமிலி டிராமாவாக இருக்கும் என்றும், இது பான் இந்தியா படம் அல்ல என்றும் இப்பட தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் ரவீனா டன்டன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.வி இசையில் உருவாகும் இப்படத்தில் மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்கிறார்.


