News May 30, 2024

‘ஜியோ ஃபைனான்ஸ்’ App அறிமுகம்

image

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், ‘ஜியோ ஃபைனான்ஸ் App-இன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த App மூலம், டிஜிட்டல் பேங்கிங், UPI பண பரிவர்த்தனைகள் மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். உடனடியாக டிஜிட்டல் வங்கி கணக்கைத் திறக்க முடியும். வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புகளை இதில் பார்த்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில், வீட்டுக் கடன், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பல்வேறு வசதிகள் கொண்டு வரப்படவுள்ளது.

Similar News

News August 22, 2025

பொது அறிவு வினா- விடை

image

கேள்விகள்:
1. சென்னை என்ற பெயர் யாரின் பெயரில் இருந்து வந்தது?
2. கதக் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
3. மனித உடலில் வியர்க்காத உறுப்பு?
4. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் வாயுவின் சதவீதம் என்ன?
5. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்ற இடம் எது?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 22, 2025

இன்று ஒரே நாளில் ₹2,000 உயர்ந்தது

image

<<17480599>>தங்கம் விலை இன்று(ஆக.22)<<>> சரிந்த போதிலும், வெள்ளி விலை விண்ணை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையில் கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹128-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ₹1,28,000-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை போலவே வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ள நிலையில், வெள்ளி விலை மற்றும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

News August 22, 2025

தோனி கேப்டன்சி.. ஒரே வரியில் சொன்ன டிராவிட்

image

தோனி கேப்டன்சியில், அவர் வீரர்களைக் கையாண்ட விதத்தை இப்போதும் நினைத்து பிரமிப்படைவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ஒரு இளைஞராக இருந்து கேப்டன் பொறுப்பில் தன்னை தக்கவைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்றும் தோனிக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அதேபோல், வீரர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணையும் திறனே ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!