News May 30, 2024

தேனி: ஆட்டோவில் தவறி விழுந்த பெண் மரணம்

image

இராயப்பன்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனது தோட்டத்தின் அருகில் இறங்க முயன்ற போது ஆட்டோ டிரைவர் கவனிக்காமல் ஆட்டோவை எடுத்ததால் மல்லிகா கீழே விழுந்தார். தலையில் அடிபட்ட நிலையில், தேனி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராயன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

Similar News

News November 5, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (05.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 5, 2025

தேனி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

✅கூட்டு பட்டா,

✅விற்பனை சான்றிதழ்,

✅நில வரைபடம்,

✅சொத்து வரி ரசீது,

✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

News November 5, 2025

தேனி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பன்னுங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தேனி மாவட்ட மக்கள் 04546-255477 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!