News May 30, 2024
ஈசா யோகா மையம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 4.75 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
Similar News
News August 20, 2025
வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திட்டப் பகுதிகளில் வீட்டுமனை மற்றும் குடியிருப்புகளைப் பெற்றவர்களில், வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியவர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. என கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்தி, தங்கள் பெயருக்கான கிரையப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்
News August 20, 2025
கோவை: தோஷங்களை நீக்கும் கரிவரதராஜ பெருமாள்!

கோவை, குப்பிச்சிபாளையத்தில் புகழ்பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த பெருமாளை வணங்கினால், ஜாதக ரீதியிலான தோஷங்கள் நீங்குமாம். இங்கு பச்சை பயறும், உருண்டை வெல்லமும் பெருமாளுக்கு படைத்து, பின்பு அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினால், தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்குமாம். வெள்ளிக்கிழமைகளில் மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறதாம்.SHAREit
News August 20, 2025
கவனமாக இருங்கள் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் உள்ள சுங்கம் பகுதியில், சைபர் குற்றங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் மோசடிகள் குறித்து நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் சரவணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது,மோசடி நடந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்தோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றார்.