News May 30, 2024
பட்டப் படிப்புக்கு மாணவிகள் சேர்க்கை

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற 4683 மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை, இளம் அறிவியல் என 13 பாடப் பிரிவுகளில் மொத்தம் 880 இடங்கள் உள்ள நிலையில் 4683 விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளன. இதையடுத்து கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. கலந்தாய்வில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
Similar News
News November 26, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (26.11.2025) சமூக தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிட்டது. இணையத்தில் காணப்படும் போலி ஆன்லைன் விளையாட்டுகள் ஆசையை தூண்டி நேரம் மற்றும் பணத்தை பறிக்கும் அபாயம் இருப்பதால் அவற்றில் ஈடுபட வேண்டாமென எச்சரித்துள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் வஞ்சகங்களில் விழாமல் விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
News November 26, 2025
திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
திண்டுக்கல்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <


