News May 30, 2024
எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி

திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: எண்டோஸ்கோப்பி என்பது இரைப்பையில் உள்ள திசுக்களின் நோய்களை கண்டறிய பயன்படுகிறது. ஆனால், அல்ட்ராசவுண்ட் மூலமாக குடலின் தோல் பகுதி மற்றும் வெளிப்புற திசுக்களின் நிலையை கண்டறியலாம் என தெரிவித்திருந்தனர்.
Similar News
News September 10, 2025
திண்டுக்கல் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து!

திண்டுக்கல்: கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கொரசினம்பட்டி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செப்டம்பர்.10) கார் – பைக் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் வந்த ஒட்டன்சத்திரம் இடையகோட்டையைச் சேர்ந்த ஆஷிஷ் (27) என்பவர் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
News September 10, 2025
திண்டுக்கல்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஏல அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 15 குளங்களின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கின்றன. இதுகுறித்த மேலம் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) ஆசிரியர் தகுதி இன்றே(செப்.10) கடைசி நாள் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முகவரி http://trb.in.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் இன்று 5 மணிக்குள் இடைநிலை ஆசிரியர்கள், பி. எட் இறுதியாண்டு படிப்பவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.