News May 30, 2024
நாமக்கல் அருகே அதிகரிக்கும் இளநீர் விற்பனை

பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக இளநீர் விற்பனை சரிவடைந்தது. இந்நிலையில் இந்த வாரம் தொடக்கம் முதலே படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் இளநீர் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகின்றது. இதனால் இளநீர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News October 31, 2025
ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விண்ணப்பிக்கலாம்

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழக பயணிகளுக்கு சேவையாற்றுவதற்காக தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இப்பணிக்காக விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியவற்றை மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். நவ.03-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து நாளை (நவம்பர்.1) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால், நாமக்கல் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
News October 31, 2025
திருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு!

சேலம் மாவட்டம் எடப்பாடி சின்னதாண்டவனூரைச் சேர்ந்த முத்துசாமி (30) என்ற கட்டுமான தொழிலாளி, திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் மில்லில் கட்டுமான வேலை செய்துகொண்டிருந்தபோது கலவை எந்திரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனே மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


