News May 30, 2024
மதுரையில் டிடிஎஃப் வாசன் கைது

தொடர்ந்து சட்டவிதிகளை மீறி, சிறை வரை சென்று வந்தவர் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். மதுரையில் தனது நண்பருடன் காரில் பயணிக்கும் போது, வழக்கம்போல போக்குவரத்து விதிமுறைகளை மீறினார். போன் பேசிக்கொண்டே காரை ஓட்டி, அதை வீடியோவும் எடுத்து யூடியூபில் வெளியிட்டது என்று, விதிமுறைகளை மீறியதால், மதுரை அண்ணாநகர் போலீசார் வாசனை காருடன் கைது செய்தனர்.
Similar News
News July 10, 2025
வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எழுதப்படிக்க தெரிந்தோர் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
” பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 29க்குள் அலுவலகத்தில் வழங்க வேண்டும் ” என்று மதுரை வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
குமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் வழித்தட மாற்றம்

மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, ஜூலை 11 அன்று காலை 05:15 மணிக்கு புறப்படும் குமரி-ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) மதுரை, கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல்லில் நிற்காமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை சந்திப்பு, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.
News July 10, 2025
மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஆரப்பாளையம் பஸ் நிலைத்திலிருந்து வைகை வடகரை வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லும் நகர, புறநகர் பஸ்கள் தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேசன் வழியாக செல்லவேண்டும்.ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையம் செல்லும் நகர் பஸ்கள் குருவி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.