News May 30, 2024
இன்றுடன் பிரசாரம் முடிகிறது

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கடைசிக் காட்டாத தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. ஏழாவது கட்டமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட உத்தர பிரதேசம், பிஹார், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Similar News
News September 6, 2025
BREAKING: அதிமுகவில் 2,000 நிர்வாகிகள் ராஜினாமா

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனின் கட்சி பதவியை பறித்த EPS-ன் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று ஒரேநாளில் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பல நிர்வாகிகள் தனித்தனியாக கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வருகிறார்களாம்.
News September 6, 2025
காலிஸ்தான் தீவிரவாதம்: ஒப்புக்கொண்ட கனடா

காலிஸ்தான் இயக்கங்கள் கனடாவில் தீவிரவாத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை அந்நாடு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அந்நாட்டு நிதித்துறை அறிக்கையில், காலிஸ்தான், பாபர் கால்சா உள்ளிட்ட இயக்கங்கள் வெளிநாட்டு வாழ் மக்களிடமும், NPO-க்களிடமும் பணம் வசூல் செய்தது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ட்ரூடோவால் சீர்கெட்ட இருநாட்டு உறவில், தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.
News September 6, 2025
குழந்தைங்க அடிக்கடி மறக்குறாங்களா? இதோ தீர்வு

நீங்கள் கற்றுக்கொடுப்பதை குழந்தைங்க உடனடியாக மறக்கிறார்களா? அவர்களுக்கு கற்றல் ஆர்வமில்லை என நினைக்கவேண்டாம். இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர். உங்கள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க, ➤9 மணி நேரமாவது அவர்கள் தூங்கவேண்டும் ➤அவர்களை வெளியில் விளையாட அனுப்புங்கள் ➤அதிக நேரம் ஃபோன் பார்ப்பதற்கு அனுமதிக்காதீங்க ➤ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொடுங்கள். SHARE.