News May 29, 2024
இந்தியாவில் அதிகரித்து வரும் அரசியல் கட்சிகள்

2009 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 751 கட்சிகள் பங்கேற்றுள்ளன. இது, 2019 தேர்தலில் 677 ஆகவும், 2014 தேர்தலில் 464 ஆகவும், 2009 தேர்தலில் 368 ஆகவும் இருந்துள்ளது. அதன்படி, 15 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை 104% அதிகரித்துள்ளது.
Similar News
News November 26, 2025
சினிமாவில் இருந்து விலகுகிறேன்… அறிவித்தார்!

‘சென்னை 28’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. பின்னர் ரஜினிகாந்துடன் அவர் நடித்த அனிமேஷன் படம் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு என பல படங்களில் நடித்த அவர், கடைசியாக ’மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலுக்காக சினிமாவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
News November 26, 2025
நெல் பாதிப்பு.. ஏக்கருக்கு ₹25,000 வழங்குக: EPS

மழையினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என EPS தெரிவித்துள்ளார். பருவமழைக்கு முன்பாக வாய்க்கால்களை அரசு தூர் வாராததே பயிர்கள் நீரில் மூழ்க காரணம் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், அரசின் சார்பாக நெல் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹25,000 நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என CM ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 26, 2025
International Roundup: ஃபிரான்ஸ் EX அதிபருக்கு சிறை

*ஆப்பிரிக்க நாடான கினி பிசாவ்வோவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. *இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி. *ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்கோசியின் சிறை தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. *உக்ரைன் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புடின் ஆலோசகர்களின் தொலைபேசி அழைப்புகள் லீக்கானது. *பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.


