News May 29, 2024
வாக்கு அரசியல் செய்யவே தியானம்: கே.பாலகிருஷ்ணன்

பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தியான நிகழ்ச்சி தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்ற அவர், வாக்கு அரசியல் செய்வதற்காகவே பிரமதர் மோடி குமரியில் தியானம் செய்ய இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். விவேகானந்தர் மண்டபத்தில் மோடி, மே31 முதல் 2 நாள்களுக்கு இரவும் பகலாக தியானம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News August 24, 2025
சட்டம் அறிவோம்: திடீரென போலீஸ் கைது செய்தால்..

வீட்டில் இருக்கும் ஒருவரை புகார் ஒன்றின் பேரில், திடீரென போலீஸ் கைது செய்யும் காட்சிகள் படங்களில் காட்டப்படும். ஆனால், CrPC 41, CrPC 41A பிரிவுகளின் படி, ஒருவரை கைது செய்ய போலீசாரிடம் பிடிவாரண்ட் இருக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல, பிடிவாரண்டுடன் கைது செய்யப்பட்டாலும், CrPC 21 சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட நபர் உடனே ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT.
News August 24, 2025
‘அம்மா நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு 3 பேர் காரணம்’

தெலங்கானாவில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் கொடிரெக்கலா சுதீர்(24) தனது கடிதத்தில், ‘நான் சாகப்போகிறேன். எனது சாவுக்கு 3 பேர் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சுதீர் தவறான உறவில் இருந்ததாக அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் வதந்தி பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. சோகம்
News August 24, 2025
‘எஞ்சாமி தந்தானே’… ‘இட்லி கடை’ 2-வது பாடல்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் 2-வது பாடல் ‘எஞ்சாமி தந்தானே’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கிராமிய குத்து பாடலாக எஞ்சாமி தந்தானேவை உருவாக்கியுள்ளார். சிறுவர்களுடன் தனுஷ் குத்தாட்டம் போடும் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸிற்கு ‘இட்லி கடை’ திட்டமிடப்பட்டுள்ளது.