News May 29, 2024

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு ஆர்டிஒ மரியாதை

image

அரூர், மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவரும் திருப்பூர் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்து வந்தவருமான முனிராஜ் என்பவர் உடல் நலம் சரியில்லாமல் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதையடுத்து அவரது உள்ளுறுப்புகள் அவரது குடும்பத்தினரால் தானம் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க அரூர் ஆர்டி ஒ வில்சன் ராஜசேகர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Similar News

News August 13, 2025

அதிர்ச்சி: தருமபுரி மாவட்டத்தில் 3,056 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 20 பேர் நாய் கடித்து ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி- ஆக.10 வரை சுமார்3,056 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் தெரு நாய் தொல்லை உள்ளதா? மாவட்டத்தின் <>அதிகாரபூர்வ தளத்தில் <<>>உள்ள நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

தமிழக முதல்வா் தருமபுரி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை

image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தருவதையொட்டி, ஆக. 16, 17 ஆகிய இருதினங்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் ஆக. 16, 17 தேதிகளில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்கவுள்ளாா். எனவே, பாதுகாப்பு கருதி அந்நாள்களில் தருமபுரி பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக கூறினார்.

News August 13, 2025

தருமபுரி மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

நம்ம தருமபுரி மாவட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கலாமா?
▶️நகராட்சி- (2)
▶️பேரூராட்சிகள்- (15)
▶️வருவாய் கோட்டம்- (2)
▶️தாலுகா- (7)
▶️வருவாய் வட்டங்கள் – (7)
▶️வருவாய் கிராமங்கள்- (470)
▶️ஊராட்சி ஒன்றியம்- (10)
▶️கிராம பஞ்சாயத்து- (254)
▶️MP தொகுதி- (1)
▶️MLA தொகுதி- (5)
▶️மொத்த பரப்பளவு – 4497.77 ச.கி.மீ
▶️ மக்கள் தொகை- 15,06,843
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

error: Content is protected !!